Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புத்தக கண்காட்சிகளில் அகல் விளக்கு புத்தகங்களுக்கு தடை.. பபாசி அதிரடி அறிவிப்பு...

புத்தக கண்காட்சிகளில் அகல் விளக்கு புத்தகங்களுக்கு தடை.. பபாசி அதிரடி அறிவிப்பு...

Webdunia 9 hrs ago

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் பபாசி நடத்தும் புத்தக காட்சிகளில், நூலக முறைகேடுகளில் தொடர்புடையதாக கூறப்படும் 'அகல் விளக்கு', 'ஃபீனிக்ஸ்' மற்றும் 'சிக்மா' ஆகிய 3 பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தவறான தகவல்கள் அடங்கிய புத்தகங்களை அச்சிட்டு பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த பபாசி நிர்வாகிகள், இந்த 3 பதிப்பகங்களும் பபாசியில் உறுப்பினராக இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பபாசி தலைவர், மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து நடத்தப்படும் எந்தவொரு புத்தகக்காட்சியிலும் இந்த 3 பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், இதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், வரலாறு மற்றும் இலக்கிய புத்தகங்களில் செயற்கை நுண்ணறிவை முழுமையாக பயன்படுத்தும்போது உணர்வில்லாத மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதால், இதுபோன்ற தவறான புத்தகங்களைத் தயாரித்து விற்பனை செய்வோர் மீது பபாசி சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil