அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புதுச்சேரியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார். ராகுல் காந்தியின் இந்த வருகை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், ராகுல் காந்தியின் தமிழ்நாடு வருகை குறித்து தற்போது வரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அவர் எப்போது தமிழகத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
புதுச்சேரி பயணத்தை தொடர்ந்து தமிழகத்திற்கான தேர்தல் பிரச்சார தேதிகள் பின்னர் அறிவிக்கப்படுமா? அல்லது தமிழகத்தை ராகுல் காந்தி புறக்கணிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva

