Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதுச்சேரியிலும் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக.. வாக்கு சதவீத முழு விவரங்கள்..!

புதுச்சேரியிலும் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக.. வாக்கு சதவீத முழு விவரங்கள்..!

Webdunia 2 weeks ago

2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் பாரம்பரிய அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளன.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்திய தாக்கம் அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

முக்கிய கட்சிகளின் வாக்கு விவரம்:க

என்.ஆர். காங்கிரஸ் 23.12%

காங்கிரஸ் 17.54%

தமிழக வெற்றிக் கழகம் 16.72%

தி.மு.க 13.74%

பா.ஜ.க 12.19%

அ.தி.மு.க 1.09%

இந்த தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியம், முதன்முதலில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, பாஜக, தி.மு.க-வை விட அதிக வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்ததுதான்.

அ.தி.மு.க: புதுச்சேரியில் இம்முறை வெறும் 1.09% வாக்குகளை மட்டுமே பெற்று மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் புதுச்சேரியில் ஒரு புதிய மும்முனை போட்டிக்கான அஸ்திவாரத்தை போட்டுள்ளன.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil