தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் பரிந்துரை, லஞ்ச டிரான்ஸ்பர் மற்றும் ஆள் பற்றாக்குறை முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய வரலாற்று சிறப்புமிக்க இடமாறுதல் கொள்கையை அறிவித்துள்ளது.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கை நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
இப்புதிய விதிகளின்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலுள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம் செய்யப்படுவர். மேலும், விற்பனையின் அடிப்படையில் கடைகள் A, B, C எனத் தலைமை அலுவலகத்தால் தரம் பிரிக்கப்பட்டு, வெளிப்படையான சீனியாரிட்டி அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
நவம்பர் 2026 இறுதிக்குள் அதிக ஆட்கள் உள்ள கடைகளிலிருந்து பற்றாக்குறை உள்ள கடைகளுக்கு பணியாளர்களை மாற்றி சமன் செய்யும் அதிரடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது. 2028 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் இதற்கான கவுன்சிலிங் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
அரசியல் செல்வாக்கு மற்றும் லஞ்ச ஒழிப்புக்குச் சாட்டையடியாக அமைந்துள்ள தவெக அரசின் இந்த வெளிப்படையான கவுன்சிலிங் முறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

