ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் நாட்டின் மீதும், அமெரிக்க ராணுவ படை மீதும் திருப்பி தாக்கி வருகிறது.
இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வரவில்லை. ஏனெனில், எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. நட்பு நாடுகள் தவிர மற்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என ஈரான் தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக பல நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வணிக சிலிண்டர் கிடைக்காமல் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ஈரானை அழித்திவிட்டோம்.. ஈரானை முடித்து விட்டோம்.. அங்கு ஆட்சி மாறிவிட்டது.. இன்னும் இரண்டு வாரங்களில் போர் முடிவுக்கு வரும்' என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்.
ஆனால், ஈரானோ அமெரிக்காவின் A-10 WARTHOG ரக தாக்குதல் விமானம் மற்றும் F-15E போர் விமானம் இரண்டையும் ஈரானிய ராணுவம் சுட்டு வீழ்த்திவிட்டது. இது அமெரிக்காவுக்கு இழப்பாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் 'ஹோர்முஸ் நீரிணையை திறந்து ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற இன்னும் கொஞ்ச கால அவகாசமே தேவை. ஈரான் எண்ணெய் கிடைத்தால் அது உலகுக்கே பெரும் பலனைத் தரும்' எனவும் அவர் கூறியிருக்கிறார்.

