Dailyhunt
ஈ.சி.ஆர் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க ஏற்பாடு!.. விஜய் போடும் ஸ்கெட்ச்!..

ஈ.சி.ஆர் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க ஏற்பாடு!.. விஜய் போடும் ஸ்கெட்ச்!..

Webdunia 4 days ago
மிழ் திரையுலகிலிருந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் எம்ஜிஆருக்கு பின் விஜய்க்கு மட்டும்தான் நட்சத்திர கவர்ச்சி கிடைத்தது.
எம்ஜிஆருக்கு பின் விஜய்க்குதான் மக்களின் பேராதரவும் கிடைத்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளை வாங்கி சாதனை படைத்திருக்கிறது.

அதோடு 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. விஜய் முதல்வராவது உறுதியாக விட்டாலும் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எனவே காங்கிரஸ், பாமக, விசிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரப்பில் பேசி வருவதாக சொல்லப்படுகிற்து. அல்லது விஜய்க்கு அதிமுக ஆதரவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது..


ஒருபக்கம் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தவெகவுக்கு உள்ளது. ஏனெனில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். எனவே, எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சி மாறி விடக்கூடாது.. எனவே அவர்களை சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள ஃபோர் பாயிண்ட் ஷெரட்டான் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


ஆனால் சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் அவரவரின் வீடுகளில் தங்கிக் கொள்ளலாம்.. வெளி மாவட்ட எம்எல்ஏக்கள் தங்குவதற்கு மட்டுமே மாமல்லபுரத்தில் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என தவெக விளக்கமளித்திருக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil