அரசியலில் அவ்வப்போது அதிசயங்கள் நிகழும்.. அப்படித்தான் எம்ஜிஆர் வந்து ஒரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டினார்.
பல வருடங்கள் திமுகவில் பயணித்து திரைப்படங்கள் மூலம் அந்த கட்சியை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சென்ற எம்ஜிஆர் அண்ணாவின் மறைவுக்கு பின் கட்சியின் நிதி பற்றி கேள்வி எழுப்பதால் அவரை திமுகவிலிருந்து நீக்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
இதையடுத்து அதிமுக என்கிற கட்சியை துவங்கி 1977ம் வருடம் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர் எம்ஜிஆர் போட்டியிட்ட முதல் தேர்தலில் அதிமுக 33.52 சதவீத வாக்குகளை பெற்றது. அதன்பின் அடுத்த மூன்று தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி. எம்.ஜி.ஆர்தான் முதலமைச்சர் 15 வருடங்கள் திமுக ஆட்சியில் இல்லை.

அதன்பின் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி மாறி ஆட்சி அமைத்தார்கள். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்திருக்கிறது. மு.க ஸ்டாலின் தான் போட்டியிட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்றுப் போயிருக்கிறார்.
ஒருபக்கம் 49 ஆண்டுகால சாதனையை விஜய் முறியடித்திருக்கிறார். ஏனெனில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அதாவது எம்ஜிஆர் வாங்கியதை விட 1.48 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்றிருக்கிறது..
அதேநேரம் 1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்ஜிஆர் 33.52 சதவீத வாக்குகளை வாங்கியதோடு மட்டுமல்லாமல் 144 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். அதை விஜய் அதில் கோட்டை விட்டிருக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், தவெகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டது..