Dailyhunt
எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடையாது.. ஈபிஎஸ் மீது இரண்டாம் கட்ட தலைவர்கள் கோபம்.. மாற்றம் நடக்குமா?

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடையாது.. ஈபிஎஸ் மீது இரண்டாம் கட்ட தலைவர்கள் கோபம்.. மாற்றம் நடக்குமா?

Webdunia 4 days ago

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவிற்கு அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அதிமுகவின் கோட்டைகள் தகர்க்கப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.

தேர்தல் வியூகங்களில் ஏற்பட்ட தோல்வி மற்றும் கூட்டணி கணக்குகள் தடம் புரண்டதே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். குறிப்பாக, பாமக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் அமைத்த கூட்டணி, விஜய்யின் தவெக அலையில் அடித்து செல்லப்பட்டதை சுட்டிக்காட்டி தலைமை பண்பு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதனால், கட்சியில் அதிரடியான தலைமை மாற்றம் நிகழுமா அல்லது உட்கட்சி பூசல் வெடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. எவ்வித கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிட்ட விஜய் அரியணையை நோக்கி நகரும் வேளையில், பாரம்பரியமிக்க அதிமுகவின் இந்த நிலை அக்கட்சித் தொண்டர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil