நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று முதல் மாணவர்கள், இளைஞர்கள், சமூக அவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்னையில் திமுக ஆதரவாளரான பிக் பாஸ் ஜூலி மற்றும் சில இளைஞர்கள் Gen z DMK என பதிக்கப்பட்ட டீசர்ட் அணிந்து அங்கு சென்றனர். அதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'நீங்கள் ஏன் இப்படி டீ சர்ட் அணிந்து வந்திருக்கிறீர்கள்? நாங்கள்தான் இதை நடத்துகிறோம் என்று காட்டுகிறீர்களா? இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் போராட்டம் அல்ல.. இது மக்களின் போராட்டம்' ஏற்கனவே இந்த போராட்டத்திற்கு ஒரு முத்திரை குத்தியிருக்கிறார்கள்.. நீங்கள் மேலும் வந்து இப்படி செய்ய வேண்டுமா?' என்று கேட்க ஜூலியும், அவருடன் வந்த இளைஞர்களும் அங்கிருந்து எழுந்து ஆட்டோவில் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டனர்.
இன்று காலை நடிகை சனம் செட்டி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு சென்று பேசியபோது 'நான் ஒரு விஜய் ரசிகை' என கூறிய போது அவரிடமிருந்து மைக்கை சிலர் பிடுங்கிவிட்டனர். இதற்கு சனம் செட்டி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது ஜனநாயக போராட்டமே இல்லை.. ஏதோ அஜண்டாவுடன் போராட்டத்தை நடத்துகிறார்கள்' எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

