Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்று மாலையே கொளத்தூருக்கு போகும் ஸ்டாலின்!.. பின்னணி என்ன?..

இன்று மாலையே கொளத்தூருக்கு போகும் ஸ்டாலின்!.. பின்னணி என்ன?..

Webdunia 2 weeks ago
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். கடந்த 5 வருடங்களில் பெண்களுக்கு இலவச பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே மூன்று மாதத்திற்கும் சேர்த்து 3 ஆயிரம் மற்றும் கோடைகால சிறப்பு தொகையாக 2 ஆயிரம் என சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை பெண்களின் வங்கி கணக்குகளில் திமுக செலுத்தியது.

இதன்மூலம் பெண்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என திமுக நம்பியது. ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரி அமைந்துவிட்டது. எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட பெண்கள் விஜய்க்கு வாக்களித்துவிட்டார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.


திமுகவோ 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்திருக்கிறது. அதிலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்திருக்கிறார்..

தற்போது தவெக ஆட்சியில் அமர திமுக எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. திமுக தோற்றுப் போனதை விட திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றுப் போனதைத்தான் திமுக ஆதரவாளர்களாலும், திமுக தொண்டர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பலரும் தங்களின் சோகத்தையும், கோபத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.


இந்நிலையில், தோல்வியை சந்தித்தாலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக இந்த மாலை கொளத்தூர் தொகுதிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் செல்கிறார்.இதையடுத்து 'இதுதான் எங்கள் தலைவர்.. இதுதான் திமுக.. தோல்வியைக் கண்டு ஸ்டாலின் துவண்டுவிடமாட்டார். மக்களோடுதான் எங்கள் அரசியல்' என திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil