ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனம் தனது அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட 'இன்-விஸ்டா 5-டோர் சைடு-பை-சைடு' ரெஃப்ரிஜிரேட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை ரூ.2,59,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிட்ஜ் நவீன சமையலறை வடிவமைப்பிற்கு ஏற்ப பக்கவாட்டில் இடைவெளிஎதுவும் இன்றி கச்சிதமாகப் பொருந்தும் வகையில் 'ஃப்ரீ பில்ட்-இன்' தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது 'ஆர்னேட் பிளாக்' கல் அமைப்பிலான பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்:
5-டோர், 5-மண்டல சேமிப்பு: இதில் குடும்ப தேவைகளுக்கான 12 பிரிவுகள் மற்றும் 5 பிரத்யேக சேமிப்பு மண்டலங்கள் உள்ளன.
மேஜிக் கன்வெர்ட்டிபிள் மண்டலம்: 66 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மண்டலத்தின் வெப்பநிலையை -20°C முதல் +5°C வரை தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியும்.
எம்.ஆர்.ஏ ஃப்ரெஷ் தொழில்நுட்பம் : காய்கறிகள் மற்றும் பழங்களில் ஈர்ப்பதத்தைத் தக்கவைத்து, அவற்றின் புத்துணர்ச்சியை 2 முதல் 6 மடங்கு வரை கூடுதல் நாட்களுக்குப் பாதுகாக்கிறது.
பாட்டம் கூலிங் மற்றும் ஏபிடி புரோ : அதிவேகக் காற்றுச் சுழற்சி மூலம் பனி உருவாவதைத் தடுப்பதோடு, தானியங்கி முறையில் கிருமிநாசினி சுழற்சியையும் மேற்கொள்கிறது.
ஹேயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் முன்னணி சில்லறை விற்பனையகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இதைப் பெறலாம்.

