Dailyhunt
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி: 'பணம் வேண்டாம், கார்டு வேண்டாம்' வியந்து போன ஜெர்மனி பயணி!

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி: 'பணம் வேண்டாம், கார்டு வேண்டாம்' வியந்து போன ஜெர்மனி பயணி!

Webdunia 6 days ago

ந்தியாவின் QR Code அடிப்படையிலான டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை கண்டு ஜெர்மனியை சேர்ந்த பிலிப் என்ற பயணி வியந்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பணப்பரிமாற்றம் செய்வது மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் இருப்பதாக அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கோயில்கள், காய்கறி சந்தைகள் முதல் டாக்ஸிகள் வரை அனைத்து இடங்களிலும் க்யூஆர் கோடு வசதி இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"உண்மையான டிஜிட்டல் இந்தியா" என்று புகழ்ந்துள்ள அவர், கையில் ரொக்க பணமோ அல்லது டெபிட்/கிரெடிட் கார்டுகளோ தேவையில்லாமல், வெறும் செல்போனை வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்த முடிவது ஆச்சரியமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் இந்த எளிமையான மற்றும் பரவலான டிஜிட்டல் கட்டண முறை, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருப்பதை இவரது பதிவு உறுதிப்படுத்துகிறது. உலகளவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் இந்தியா ஒரு முன்னோடியாக திகழ்வதை இது மீண்டும் பறைசாற்றுகிறது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil