கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். பல வருடங்களாக விஜயின் போட்டி நடிகராக வலம் வந்தார்.
கடந்த பல வருடங்களாக அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவரின் குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அவரின் புதிய படம் தற்போது வரை துவங்கப்படவில்லை.
இந்நிலையில்தான், அஜித்தின் தாயார் மோகினி (89) வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் மோகினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித்தின் சகோதரர் அனில் குமார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் 'எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவமாக விளங்கிய தாயார் இன்று அதிகாலை உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். அவரின் இறுதிச் சடங்கு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக மட்டுமே நடைபெறவுள்ளது. இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்' எனவும் கூறியிருக்கிறார்.