Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜனநாயகனுக்கு A சான்றிதழ்!. ரிலீஸ் தேதி எப்போ?.. முக்கிய அப்டேட்..

ஜனநாயகனுக்கு A சான்றிதழ்!. ரிலீஸ் தேதி எப்போ?.. முக்கிய அப்டேட்..

Webdunia 2 weeks ago
டிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தற்போது வரை இந்த படம் வெளியாகவில்லை. இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்திலும் லீக் ஆனது. சுமார் ஒரு கோடி பேர் இந்த படத்தை பார்த்திருப்பதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

தற்போது ஒரு வழியாக தணிக்கை துறை அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை மீண்டும் பார்த்து இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். விரைவில் சான்றிதழ் கொடுக்கப்படவிருக்கிறது. எனவே படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்கிற ஆலோசனையில் தயாரிப்பாளர் ஈடுபட்டிருக்கிறார்..

படத்தை வருகிற 16-ம் தேதி ரிலீஸ் செய்யுங்கள் என ஓடிடி நிறுவனம் சொல்கிறதாம். ஏனெனில் ஓடிடியில் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படத்தை வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்களோ ஜூலை 24ம் தேதி வெளியிடுங்கள் என சொல்கிறார்களாம். எனவே இது இரண்டு தேதிகளில் ஏதோ ஒன்றில் ஜனநாயகன் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil