Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜெம் கிரானைட்டிடம் அதிக பணம் வாங்கியது தவெகதான்!.. நிர்மல்குமாருக்கு திமுக பதிலடி...

ஜெம் கிரானைட்டிடம் அதிக பணம் வாங்கியது தவெகதான்!.. நிர்மல்குமாருக்கு திமுக பதிலடி...

Webdunia 12 hrs ago
டந்த திமுக ஆட்சியில் ஜென் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.வீரமணி வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு நடைபெற்றது.
ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் வீரமணியை தப்ப விட்டது திமுக ஆட்சியில்தான்..

ஏன் அப்போது அவர் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 'ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்திடமிருந்து அதிகப்படியான பணம் வாங்கியது அமைச்சர் நிர்மல்குமார்தான் என்று மக்கள் சொல்கிறார்கள்' எனக் கூறியிருக்கிறார்..

இதற்கிடையில் வீரமணி விவகாரம் தொடர்பாக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோரிடம் கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை முதலமைச்சர் விஜய் ஆலோசனை செய்திருப்பதாகவும், இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு என்று கேட்ட முதலமைச்சர் ஒருத்தரையும் விடாதீர்கள் என்றும், சுதந்திரமாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil