Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜெயிலர் 2 நெகட்டிவ் விமர்சனம் ஏன்? நடிகர் சரவணன் விளக்கம்...

ஜெயிலர் 2 நெகட்டிவ் விமர்சனம் ஏன்? நடிகர் சரவணன் விளக்கம்...

Webdunia 1 day ago

நடிகர் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சட்டமும் நீதியும்' வெப் தொடரின் இரண்டாவது சீசன், வரும் அக்டோபர் 23-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சரவணன் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம், "நீங்கள் 'ஜெயிலர் 1' படத்தில் நடித்திருக்கிறீர்கள். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'ஜெயிலர் 2' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிலர் இப்படத்தை எதிர்மறையாகவும் விமர்சித்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நடிகர் சரவணன், "நான் எப்போதுமே ரஜினி சாருடைய ரசிகன். 8-ஆம் வகுப்பில் இருந்து அவருக்காகக் கைதட்டி படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு வரைக்கும் எனக்கு ஒரே நடிகர் தலைவர் மட்டும்தான்; என்னை பொடுத்தவரை ரஜினிதான் ஆஸ்தான நடிகர். எந்தப் படத்தையும் 100 சதவிகிதம் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது, சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.

ஆனால், எனக்கு 'ஜெயிலர் 2' படம் ரொம்பவே பிடித்திருந்தது, மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். சூப்பர் ஸ்டாரை எந்த அளவுக்கு திரையில் சிறப்பாக காட்ட முடியுமோ, அந்த அளவுக்கு இயக்குநர் நெல்சன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார். அதற்காக நான் நெல்சனுக்குத்தான் முழு பாராட்டை தெரிவிப்பேன்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil