Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கை கொடுக்காத ரொமான்ஸ்!.. ஃபேமிலி செண்டிமெண்ட் கதைகளில் நடிக்கும் கவின்...

கை கொடுக்காத ரொமான்ஸ்!.. ஃபேமிலி செண்டிமெண்ட் கதைகளில் நடிக்கும் கவின்...

Webdunia 2 weeks ago
விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் நடிகர் கவினும் ஒருவர். துவக்கத்தில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடித்தார்.
அதன்பின் ஹீரோவாக மாறினார். இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட், டாடா ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. ஸ்டார், கிஸ், பிளடி பெக்கர் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது..

தற்போது நயன்தாராவுடன் இணைந்து கவின் நடித்த ஹாய் திரைப்படம் இன்று வெளியாகிறது. இது ஒரு முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாகவே உருவாகியிருக்கிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கவின் 'குடும்ப செண்டிமெண்ட் படங்களில் தொடர்ந்து நடிக்கப் போகிறேன்.. ஹாய் படம் ஒரு பக்கா குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும்..

அடுத்து கென் ராய் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் இணைந்து ஒரு படத்தின் நடிக்கப் போகிறேன்.. இதுவும் முழுக்க முழுக்க குடும்பத் திரைப்படம்.. அதேநேரம் கிஸ் படத்தை விட அதிக பேண்டஸி இந்த படத்தில் இருக்கும்.. அந்த படத்திற்கு பின் தண்டட்டி இயக்குனர் ராம் சங்கையா சார் இயக்கத்தில் ஒரு படத்தின் நடிக்க போகிறேன்.. அதுவும் ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என கூறியிருக்கிறார்..

கவின்ஸ் ரொமான்டிக் ஹீரோவாக நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்காத நிலையில் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படங்களில் தற்போது நடிப்பதே நல்லதே என்கிற முடிவை கவின் எடுத்திருப்பதாக தெரிகிறது...
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil