தற்போதெல்லாம் ஹேக்கர்ஸ் எதில் வேண்டுமானாலும் நுழைந்து விடுகிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமூகவலைத்தள பக்கங்களைக் கூட அவர்கள் ஹேக் செய்து விடுகிறார்கள்..
பல நாடுகளின் அதிகாரப்பூர்வ சமூகவலை பக்கங்களை ஹேக் செய்து அதில் சம்பந்தமில்லாத பதிவுகளை பகிர்ந்து விடுகிறார்கள்.
ஹேக்கர்ஸ் கம்ப்யூட்டர் டேட்டாக்களை திருடுவது ஒரு பக்கம் என்றால் ஒரு பக்கம் இப்படி உயர் பொறுப்பில் இருக்கும் நபர்களின் சமூகவலை பக்கங்களை ஹேக் செய்வதை ஹேக்கர்ஸ் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஒரு திரில்லிங் அனுபவத்திற்காக அவர்கள் மிகவும் அனுபவித்தே அதை செய்கிறார்கள்..

இந்நிலையில்தான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் வழக்கு விசாரணை நடந்த போது அந்த வீடியோவில் ஆபாச படங்களை ஹேக்கர்ஸ் பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் காணொளி விசாரணை நடந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஆபாச காட்சிகளை பகிர்ந்தார். அமெரிக்காவிலிருந்து காணொளியை முடக்கியதாகவும் விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டாம் எனவும் ஹேக்கர் எச்சரித்தார். இதையடுத்து காணொளி விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதோடு டெல்லி சைபர் கிரைம் போலீசார் இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..