விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்த பிரபல முன்னணி நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ( தயாரிப்பில், யஷின் சொந்த நிறுவனமான மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் யஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. படத்திற்கான மார்க்கெட்டிங் மற்றும் உலகளாவிய புரமோஷனுக்காக மட்டுமே தயாரிப்புத் தரப்பு சுமார் ரூ.100 கோடியை வாரி இறைத்ததாகக் கூறப்பட்டது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிர விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஆனால், பெரும் எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு படம் மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசளித்தது. சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில், தெளிவான மையக்கதை எதுவும் இல்லை என்றும், திரைக்கதையில் எந்தவித சுவாரசியமும் இல்லாமல் காட்சிக்கு காட்சி தத்தளிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
படம் முழுவதும் ஹீரோ எதற்காக யாரைச் சுட்டுத் தள்ளுகிறார் என்ற நோக்கமே புரியவில்லை எனவும், ஒரு பக்கம் அதிகப்படியான வன்முறை, மறுபக்கம் பெண்களுடன் கிளுகிளுப்பு என சலிப்பைத் தட்டும் காட்சிகளாலேயே படம் நிரம்பியிருப்பதாகவும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கே.ஜி.எஃப் படத்தில் இருந்த வலுவான எமோஷனும் விறுவிறுப்பும் டாக்சிக்கில் துளியும் இல்லை என்பது பார்வையாளர்களின் கருத்தாக மாறியது.
முதல் நாளில் ரசிகர்களின் பெரும் வரவேற்பால் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தாலும், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் படுவேகமாகச் சரியத் தொடங்கியது. படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகளவில் இப்படம் சுமார் ரூ.320 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, முதல் வார இறுதிக்குப் பிறகு கடுமையான சரிவைச் சந்தித்த டாக்சிக், 8-ம் நாளான நேற்று இந்தியா முழுவதும் சேர்த்து வெறும் ரூ.5 கோடியை மட்டுமே வசூலித்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

