கோடை காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிடுகிறது. இதில், முதியவர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள்.
வெயில் தாங்கமுடியாமல் முதியவர்கள் இறந்துபோவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில், வெயிலை சமாளிப்பதற்கு சில வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்!..
கோடை காலத்தில் அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் ஆகியவற்றை அருந்தவேண்டும். மேலும், நுங்கு, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துவிட்டு மிகவும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது மற்றும் உடல் சூட்டைத் தணிக்க வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் அவசியம்.

தாகம் எடுக்கும் வரை காத்துக்கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்கவேண்டும். அதோடு, இளநீர், வெள்ளரி, மோர், பன்னீர் திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு மற்றும் தர்பூசணி ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவில் அதிக காரம், புளிப்பு, மற்றும் உப்பு அதிகம் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். முடிந்த அளவு காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் குடை, தொப்பி மற்றும் சன்கிளாஸ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் சூட்டைக் குறைக்கும். செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்துவிட்டு பனங்கற்கண்டு பானம், சர்பத், நுங்கு போன்ற இயற்கையான உடலைக் குளிர்விக்கும் பானங்களைப் பருகவேண்டும்.
கோடை காலத்தில் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கவனமாக இருக்கவேண்டும். தலைவலி, மயக்கம், அல்லது சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.