இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா ஏதாவது "ஃபால்ஸ் பிளாக்" நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த கட்ட போர் எல்லைகளுடன் நிற்காது, இந்தியாவிற்குள் ஆழமாக ஊடுருவி கொல்கத்தா வரை தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், "இந்த முறை போர் 200-250 கிமீ தூரத்துடன் முடிந்துவிடாது, இந்தியர்களின் வீடுகளுக்குள்ளேயே புகுந்து தாக்குவோம்" என்றும் அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் எந்தவொரு தவறான முயற்சிக்கும் "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆப்கானிஸ்தான் எல்லையிலும் பாகிஸ்தான் மோதல்களை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவிற்கு எதிராக இத்தகைய கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva

