வருஷம் 16 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் குஷ்பு. இவர் மும்பையை சேர்ந்தவர். தாய்மொழி ஹிந்தி.
ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் இவருக்கு வரவேற்பு கொடுத்தனர். பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி கதாநாயகியாக மாறினார் குஷ்பு.
பிரபுவும், குஷ்புவும் இணைந்து நடித்து வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன. ஒரு கட்டத்தில் அரசியலிலும் நுழைந்தார். துவக்கத்தில் திமுகவில் இருந்தார்.. சில வருடங்கள் கழித்து அங்கிருந்து வெளியேறி காங்கிரசுக்கு சென்றார். காங்கிரஸில் இருந்த போது பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார். ஒருகட்டத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து காங்கிரசை திட்ட தொடங்கினார். இதனாலே அரசியல்ரீதியாக குஷ்புவின் மீது மக்களுக்கு இருந்த இமேஜும், நம்பிக்கையும் போய்விட்டது.

திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இவருக்கு இரண்டு மகள்கள். அதில் இளைய மகளுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக டெல்லி சென்றார் குஷ்பூ. அவருடன் அவரின் கணவர் சுந்தர்.சி மற்றும் அவரின் மகள் மற்றும் மருமகன் இரண்டு பேரும் சென்றிருந்தனர்.