தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 10ம் தேதி இரவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டு சென்றார்.
லண்டன் சென்றதும் சில்வர் ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். அந்த போட்டியில் நடிகரும் விஜயின் நண்பருமான அஜித்குமாரின் டீமும் கலந்து கொண்டது. விஜயும், அஜித்தும் அன்பை பரிமாறிக்கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே வைரலானது.
ஒருபக்கம், விஜய் லண்டன் விமான நிலையத்தில் இறங்கிய போது அவரை பார்க்க தமிழ் ரசிகர்கள் அங்கே காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரிடனும் விஜயால் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதில், சிலர் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரை சந்திக்க முயன்றனர். அவரின் ஆட்டோகிராப் வாங்கவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
இந்நிலையில் லண்டனில் முதல்வர் விஜய் தமிழ் மக்களை சந்திக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணி அளவில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே லண்டன் தமிழ் மக்களை விஜய் சந்திக்கவிருக்கிறார். நேற்று ஏராளமான தமிழர்களை அவர் சந்தித்த நிலையில் இன்று இதற்கென தனி ஏற்பாடுகளுடன் அவர் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

