Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

Webdunia 4 days ago
50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இரவு 8 மணிக்கெல்லாம் உறங்க சென்று விடிய காலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்து வயல்களில் வேலை செய்ய தொடங்கினார்கள்.
காலை உணவு 7 மணி, மதிய உணவு 12 மணி, இரவு உணவு மாலை 6 மணி என்றே இருந்தது. அதனால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருந்தது. 80 வயதை தாண்டியும் பலரும் வாழ்ந்தார்கள்.

ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. இப்போதுள்ள ஜென்சி கிட்ஸ்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். 70, 80களில் பிறந்தவர்கள் கூட இரவு 11 மணிக்கு மேல்தான் உறங்கச் செல்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன் பார்ப்பது என அவர்களின் பழக்கங்கள் மாறிவிட்டது..

குறிப்பாக இரவில் பல மணி நேரங்கள் செல்போன் பார்த்துவிட்டு மிகவும் தாமதமாக தூங்கச் செல்லும் பழக்கம் பலருக்கும் வந்துவிட்டது. இதன் காரணமாக அடுத்த நாள் மிகவும் சோர்வுடனையே அவர்கள் இருக்கிறார்கள். உடலும் பல வகைகளிலும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதிகாலையில் சீக்கிரம் எழும் நபர்களுடன் ஒப்பிடும்போது இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருக்கும் நபர்கள் 10 சதவீத அதிக அளவில் முன்கூட்டியே உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக Chronobiology International என்கிற மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மது அருந்துவது, புகைப்பிடிப்பது மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றோடு Biological clock பாதிக்கப்படுவதும் விரைவிலேயே மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil