தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் நேற்று டெல்லி கிளம்பி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அவருக்கு பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார். அதன்பின் அவர் அமித்ஷாவை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டது.
ஆனால் வேறு சில வேலைகளில் அமித்ஷா பிஸியாக இருந்தால் அவர் விஜயை சந்திக்கவில்லை. அதேபோல் இன்று காலை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. எனவே இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது எக்ஸ் தளத்தில் 'பிரதமர் மோடியை சந்தித்த பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எப்போதும் இணைந்து செயல்படுவதை நாங்கள் உறுதி செய்து கொண்டோம். ஒன்றிணைந்தால் வலிமையாக இருப்போம்' என பதிவிட்டிருக்கிறார்.