Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மூக்குத்தி அம்மன் 2-வால் தனுஷ் படத்துக்கு வந்த சிக்கல்!.. வட போச்சே!...

மூக்குத்தி அம்மன் 2-வால் தனுஷ் படத்துக்கு வந்த சிக்கல்!.. வட போச்சே!...

Webdunia 2 hrs ago
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்தவர் ஐசரி கணேஷ். சமீப காலமாகவே அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படங்களை இவர் தயாரித்து வருகிறார்.
ஆர்.ஜே பாலாஜியை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தயாரித்தது இவர்தான். அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.

ஆனால் சுந்தர்.சி-யை வைத்து அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் அவரின் காலை வாரிவிட்டது. ரூ.90 முதல் 100 கோடி வரை பட்ஜெட் கொண்ட மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தற்போது வரை தமிழகத்தில் 20 கோடியை கூட வசூலிக்கவில்லை. இந்த படத்தால் அவருக்கு 80 கோடிக்கும் மேல் நஷ்டம் வரும் என சொல்கிறார்கள். இந்நிலையில்தான் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிசல்ட் தனுஷ் படத்திற்கு சிக்கலாக மாறியிருக்கிறது..

அதாவது ஐசரி கணேஷ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இது ஒரு சரித்திர கதை இந்த படத்திற்காக ஜப்பானெல்லாம் சென்று லொகேஷன் பார்த்து வந்தார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு 150 கோடி பட்ஜெட் என்கிறார்கள்..

ஆனால் தற்போது மூக்குத்தி அம்மன் 2 சரிக்கி விட்டதால் இப்போதுள்ள சூழ்நிலையில் என்னால் இந்த படத்தில் இவ்வளவு முதலீடு செய்ய முடியாது என சொல்லி ஐசரி கணேஷ் ஒதுங்கிக் கொண்டாராம். எனவே இந்த படத்திற்கு வேறு தயாரிப்பாளரை தனுஷ் தேடி வருகிறாராம். எப்படி இருந்தாலும் 2029-ம் வருடம்தான் இந்த படம் துவங்கும் என்கிறார்கள்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil