Dailyhunt
முக ஸ்டாலின், உதயநிதி, சேகர் பாபு பின்னடைவு!. திமுகவினர் அதிர்ச்சி..

முக ஸ்டாலின், உதயநிதி, சேகர் பாபு பின்னடைவு!. திமுகவினர் அதிர்ச்சி..

Webdunia 2 weeks ago
மிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில் தவெக 140 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கே.பழனிச்சாமி தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், அன்பில் மகேஷ், ஓ.பன்னீர் செல்வம், சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்ட பல திமுகவினர் பின்னடவை சந்தித்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் பின்னடவை சந்தித்திருக்கிறார்கள்.


கடந்த பல வருடங்களாகவே தபால் வாக்கில் திமுகதான் அதிக வாக்குகளை பெறும். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. திமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது. அதிலும், திமுக முக்கிய தலைவர் பின்னடைவை சந்தித்திருப்பது திமுகவினருக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil