Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

Webdunia 3 weeks ago
லைஞர் கருணாநிதிக்கு பின் திமுகவின் தலைவராக மாறியவர் அவரது மகன் முக ஸ்டாலின். எம்.எல்.ஏ, அமைச்சர், மேயர், துணை முதலமைச்சர் என பல பதவிகளில் இருந்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார்..

கடந்த ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து, மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்களை அவர் அமுல்படுத்தினார். அதேநேரம் ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் கழித்துதான் அவர் பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாயை கொடுத்தார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.

அதேநேரம், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அதோடு, முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். தற்போது திமுக எதிரகட்சியாக மாறிவிட்டது. ஒருபக்கம் கட்சி தொடங்கி இரண்டு வருடங்களில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்து அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராகிவிட்டார்.

இந்நிலையில் முக ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. Z பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எஸ்கார்ட் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஸ்டாலினுக்கு எஸ்.ஐ தலைமையில் நான்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பார்கள்..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil