Dailyhunt
முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Webdunia 3 weeks ago
மிழகமெங்கும் பல ஊர்களிலும் கிளைகளைக் கொண்டது சரவணா ஸ்டோர்ஸ். துணிக்கடை மட்டுமில்லாமல் நகை கடை, பாத்திரக் கடை உள்ளிட்ட பல தொழில்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணா துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்தார். அப்படியே அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சரவணா. இந்த படத்திற்கு பின் அவரின் பெயருக்கு முன்னால் லெஜெண்ட் சேர்ந்து கொண்டது..

முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.. அதோடு படத்தின் கதை, திரைக்கதை மற்றும் லெஜென்ட் சரவணாவின் நடிப்பு, தோற்றம் என எல்லாமே விமர்சனத்திற்குள்ளானது. எனவே அடுத்து ஒரு சிறப்பான படத்தை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தார் லெஜன்ட் சரவணா.

எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, கருடன் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தின் டீசர் வீடியோவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தன் மகளுக்காக எதையும் செய்யும் ஒரு தகப்பன் கதை. படம் முழுக்க பக்கா ஆக்சன் கலந்து அதிரடியான திரைப்படமாக கொடுத்திருந்தார் துரை செந்தில்குமார்.

நேற்று வெளியான இந்த இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு நாலில் மட்டும் லீடர் திரைப்படம் 75 லட்சம் வசூல் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil