நடிகராக இருந்த விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்தார்.
ஆச்சரியம் அளிக்கும் விதமாக 60 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் அரசியல் செய்து மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளை பின்னால் தள்ளிவிட்டு தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சியமைத்து முதலமைச்சராகவும் மாறினார்.
விஜய அரசியலுக்கு புதியவர் என்பது ஒருபக்கம் இருந்தாலும் முதலமைச்சர் பதவி என்பதும் அவருக்கு புதிது. எனவே முதலமைச்சராக விஜய் எப்படி செயல்பட போகிறார்? எப்படி திட்டங்களை நிறைவேற்றப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு மக்களிடமும், அரசியல் விமர்சகர்களிடமும் இருக்கிறது. 'தவெக எம்.எல்.ஏக்களுக்கு எதுவும் தெரியாது.. அவர்கள் விஜயின் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளாக இருந்தவர்கள்.. அதேபோல் விஜய்க்கும் எதுவும் தெரியாது' என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஊடகங்களில் கூறி வருகிறார். ஆனால் இது போன்ற விமர்சனங்களுக்கு எந்த பதிலும் கொடுக்காமல் விஜய் மௌனமாகவே இருக்கிறார். எதையும் சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதே சிறந்தது என்பதுதான் முதல்வர் ஜோசப் விஜயின் எண்ணமாக இருக்கிறது..

சட்டசபையில் கூட உதயநிதி எழுப்பும் கேள்விகளுக்கு ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் போன்ற அமைச்சர்கள் மட்டுமே பதில் சொல்கிறார்கள். முதல்வர் விஜய் எதுவும் பேசுவதில்லை. எனவே விஜய் அமைதியாகவே இருக்கிறார்.. எங்கேயும் அவர் பேசுவதில்லை என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டும் விவகாரத்திலும், காவிரி நீரை பெரும் விஷயத்திலும் விஜயின் செயல்பாடுகள் முன்னாள் முதல்வர்கள் போல இல்லை.. இணக்கமாக செயல்பட்டால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியாது.. அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.. அமைதியாக இருந்தால்.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது' என்பது பலரின் குரலாக இருக்கிறது.
அதேபோல் முந்தைய திமுக அரசு போல மத்திய அரசை விமர்சிப்பதோ, சண்டை போடுவதோ தேவையில்லை என்கிற முடிவில் விஜய் இருக்கிறார்.. அதாவது மத்திய அரசுடன் இணக்கமாக சென்று தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை, நிதிகளை பெற வேண்டும் என்பதுதான் விஜயின் எண்ணமாக இருக்கிறது. இதையும் திமுக கடுமையாக விமர்சிக்கிறது.. ஆனால் இதற்கும் விஜயோ, தவெக அமைச்சர்களோ பதில் சொல்வதில்லை..

ஒருபக்கம் தமிழக வெற்றிக் கழகம் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக தவெக நிறைவேற்றவில்லை. இலவச 200 யூனிட் மின்சாரம், அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் கொடுப்பதாக சொல்லிவிட்டு இன்னும் ஆயிரம் ரூபாய் கொடுப்பது, விவசாயிகளுக்கு முழு கடனும் தள்ளுபடி என சொல்லிவிட்டு அதை கொடுக்க முடியாமல் இருப்பது போன்ற விமர்சனங்கள் இந்த ஆட்சியின் மீது இருக்கிறது..
தமிழக அரசின் கஜானாவில் தேவையான நிதி இல்லை.. அதனால்தான் வாக்குறுத்களை முழுமையாக நிறைவேற்றமுடியவில்லை என தவெகவினர் சொல்கிறார்கள்.. எப்படி இருந்தாலும் தமிழக கஜானாவின் நிதியை உயர்த்தியோ அல்லது மத்திய அரசின் உதவிகளை பெற்றோ தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் நம்புகிறார்கள்.

