Dailyhunt
நிர்வாகிகள் அதிருப்தி!.. தேர்தலில் போட்டியிடாமல் விலகும் திருமாவளவன்!..

நிர்வாகிகள் அதிருப்தி!.. தேர்தலில் போட்டியிடாமல் விலகும் திருமாவளவன்!..

Webdunia 0 months ago
திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சி கடந்த பல வருடங்களாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது.அதேநேரம் 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை திமுக நடந்து கொண்டது திருமாவுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது.
ஏனெனில் 10 தொகுதிகளை திருமாவளவன் கேட்டார்.. ஆனால் 8 தொகுதிகளை மட்டுமே திமுக கொடுத்தது. அதிலும் கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை.. இது தொடர்பாக சில வீடியோக்களையும் திருமா வெளியிட்டார்..

ஒருபக்கம் விடுதலை சிறுத்தை கட்சியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் மூன்று பேர் மற்றும் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.. எனவே, விடுதலை சிறுத்தைக்கட்சியின் நிர்வாகிகளின் அதிருப்தி திருமாவளவன் பக்கம் திரும்பியிருக்கிறது..

அவர்களை சமாதானப்படுத்த திருமாவளவன் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்கிறார்கள். எனவே தேர்தல் பணிகளை அவர்கள் புறக்கணிக்கப்போவதாக தெரிகிறது. இதையடுத்து நீங்கள் தேர்தல் பணிகளை செய்வதாக சொன்னால் மட்டுமே நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவேன் என திருமாவளவன் நிர்வாகிகளிடம் சொன்னதாக செய்திகளை கசிந்திருக்கிறது.

8 தொகுதிகல் ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை மூன்று வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். எனவே திருமாவளவனுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் சமரசம் ஏற்பட்ட பின்னரே திருமா உட்பட மற்ற 5 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil