Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

Webdunia 14 hrs ago
டந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்த துவங்கியது. இதையடுத்து அமெரிக்கா ராணுவ தடங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.
மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதையடுத்து இந்தியா விட்ட பல நாடுகளிலும் எரிபொருள் விலை உயர்ந்துவிட்டது. இந்தியாவில், இதுவரை மூன்று முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் உணவகங்களில் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது..

தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் நேற்று உருவாக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி லான்ஸ் 'ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும்' எனக் கூறியிருந்தார். எனவே அந்த ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திடுவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது..


ஒருபக்கம், இதுபற்றி கருத்து தெரிவித்த ஈரான் நாட்டின் சபாநாயகர் முகமது காலிபாப் 'நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் சலுகைகளை பெறவில்லை.. ஏவுகணைகள் மூலம் மட்டுமே பெறுகிறோம்.. பேச்சுவார்த்தை மூலம் அதை புரிய வைக்க மட்டுமே முயற்சி செய்கிறோம்.. எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் கையெழுத்து போட்ட அடுத்த நாளே போருக்கு தயாராக இருப்பவர்தான் வெற்றியாளர்' என குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவுடன் ஈரான் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் வளைகுடாவில் அமைதி திரும்புமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil