Dailyhunt
ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

Webdunia 1 week ago

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டிற்கு எதிராக இதுவரை இல்லாத அளவிலான கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் உள்கட்டமைப்புகளை தகர்க்கப்போவதாக குறிப்பிட்ட அவர், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "ஈரான் முழுவதையும் ஒரே இரவில் அழித்துவிட முடியும். அது நாளை இரவாக கூட இருக்கலாம்," என்று தெரிவித்தார். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

தெஹ்ரான் அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றாலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவில்லை என்றாலோ இந்த தாக்குதல் உறுதி என்று அவர் கூறியுள்ளார்.

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர முன்மொழியப்பட்ட 45 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேசிய ட்ரம்ப், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றாலும், இது போதுமானதாக இல்லை என்று கூறினார்.

ஈரான் மக்கள் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்ப தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தால் இரண்டு நொடிகளில் ஈரான் அரசு வீழ்ந்துவிடும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil