Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே நாளில் மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்: ஹார்மோஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்

ஒரே நாளில் மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்: ஹார்மோஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்

Webdunia 1 week ago

லகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்மோஸ் நீரிணையில் நேற்று ஒரே நாளில் மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது திடீரென ட்ரோன் மூலம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அந்த கடல் பகுதியில் மீண்டும் கடுமையான போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் உள்ள ஹார்மோஸ் நீரிணையில் இந்த அதிரடித் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த கத்தார் நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று, ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்தது. இது தவிர, அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு சர்வதேச எண்ணெய் கப்பல்களும் இந்த தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில்தான் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால போர் முடிவுக்கு வந்து, இரு நாடுகளுக்கும் இடையே முறையான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சூழலில், உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், ஹார்மோஸ் நீரிணையில் மீண்டும் இப்படி ஒரு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் புதிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil