மொத ராத்திரி மற்றும் டோரதி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருப்பவர் நடிகர் ரிஷிகாந்த்.
இந்த படத்தில் இவரின் நடிப்பை மிஷ்கின் விட்ட பல முக்கிய இயக்குனர்கள் பாராட்டி பேசினார்கள். இந்நிலையில்தான் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் ராம்சரணை வைத்து இயக்கும் புதிய படத்தின் (RC17) பூஜையில் ரிஷிகாந்த் சமீபத்தில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து அந்த படத்தில் ரிஷிகாந்தும் நடிக்கிறார் என செய்திகள் பரவியது..
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரிஷிகாந்த் 'RC17 திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை.. மொத ராத்திரி படத்தில் மைத்ரி புரடெக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதால் பூஜைக்கு என்னை அழைத்ததால் நான் கலந்து கொண்டேன். படம் வெளியான பிறகு நான் அதில் இல்லை என்பதை ரசிகர்கள் கண்டறிவதை விட நானே அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்' என அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

