மண்டாடி படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய வசூல் நிலவரத்தை பார்க்கும்போது, படம் விரைவில் தனது பட்ஜெட்டை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் வார இறுதிக்குள் ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லை மண்டாடி எளிதில் கடக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மறுபுறம், கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் 2 திரைப்படத்தின் வசூல் நிலவரம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான இப்படத்தில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, நிழல்கள் ரவி, அச்சுத் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் சுமார் *ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவான சர்தார் 2 திரைப்படம், 5 நாட்களில் உலகளவில் வெறும் ரூ.19.85 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் வெளியான படங்களின் வசூலில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மண்டாடி ரூ.100 கோடி கிளப்பை நோக்கி வேகமாக முன்னேறி வரும் நிலையில், மறுபுறம் சர்தார் 2 படத்தின் வசூல் மிகவும் மந்தமாக இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

