Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவு.. தவெகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம்.. புலம்பும் காங்கிரஸ்

சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவு.. தவெகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம்.. புலம்பும் காங்கிரஸ்

Webdunia 2 weeks ago

மிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் தலைமையின் கீழ் கட்சி சந்தித்திருக்கும் இந்த படுதோல்வி, சத்தியமூர்த்தி பவனில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

ஐம்பது ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கனவு, இந்த முறை நனவாக வாய்ப்பு கனிந்ததாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

ராகுல் காந்தியின் திட்டப்படி, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்தால், ஆட்சியில் பங்கு மற்றும் அதிக இடங்களை வென்றிருக்க முடியும் என்பதே பலரின் வாதம். ஆனால், செல்வப்பெருந்தகை மற்றும் ப.சிதம்பரம் போன்ற தலைவர்கள் தி.மு.க கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.

இதன் விளைவாக, 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தோல்வியின் உச்சமாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையே தனது தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

சரியான நேரத்தில் எடுத்த தவறான முடிவு, கட்சியை மீண்டும் தி.மு.க-வின் நிழலிலேயே இருக்க வைத்துவிட்டது" என ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி வருகின்றனர். இழந்த செல்வாக்கை மீட்கவும், தொண்டர்களின் நம்பிக்கையை தக்கவைக்கவும் காங்கிரஸ் தலைமை இனி என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil