Dailyhunt
சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!.. சிபிஐ தரப்பு வாதம்!..

சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!.. சிபிஐ தரப்பு வாதம்!..

Webdunia 0 months ago
5 வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அந்த பகுதி போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக சொல்லப்பட்டது.

இது தொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவிய ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமித்துரை, செல்லதுரை, வைகைமுத்து, தாமஸ் ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
அதில் ஆய்வாளர் பால்துரை மட்டும் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மற்ற 9 பேரும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்..

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதையடுத்து சிறையில் இருக்கும் அனைவரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட உயர்நீதிமன்றம் கடந்த 23ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதோடு இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவிருந்தது.

அப்போது கடைசியாக இரு தரப்பினருக்கும் வாதாட ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அப்போது குற்றவாளிகள் 9 பேருக்கும் அதிகபட்சமாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என சிபிஐ தரப்பு கூறியது.. சிறையில் இருப்பவர்கள் தரப்பில் பென்னிக்ஸ் தகராறு செய்ததாலே பிரச்சினை ஏற்பட்டது.

கொலை செய்யும் நோக்கத்தில் அவர்களை தாக்க வில்லை.. ஐந்தாண்டுகள் சிறையில் இருந்தது, குடும்ப பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்சனை தண்டனை வழங்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது..இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வருகிற 6தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil