சூர்யா நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான கருப்பு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வேட்டையைத் தொடர்ந்து வருகிறது.
கடந்த 13 ஆண்டுகளாக ஒரு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருந்த சூர்யாவுக்கு, இப்படம் ஒரு மிகப்பெரிய கம்-பேக் ஆக அமைந்துள்ளது.
படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்த நிலையிலும், திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை. உலகம் முழுவதும் இதுவரை ₹270 கோடிக்கும் மேல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
நல்ல படங்களை எப்போதும் மனதாரப் பாராட்டும் குணம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கருப்பு படத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.பாலாஜி... சூப்பர், சூப்பர், சூப்பர்! பெரிய ஹிட் கொடுத்து சாதிச்சிட்டீங்க. நாம சீக்கிரமே சந்திப்போம்! என ரஜினி பாராட்டியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தருணம் குறித்துப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, நமது படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சாரிடம் இருந்து ஒரு அழைப்பு வராதா என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன். அவர் கூப்பிட்டுப் பேசியது, என் வாழ்நாள் லட்சியங்களில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியது போன்ற உணர்வைத் தருகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

