Dailyhunt
சட்டசபை தேர்தல் ரிசல்ட்!. மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறுமா?.. விஜய்க்கு இருக்கும் சவால்!..

சட்டசபை தேர்தல் ரிசல்ட்!. மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறுமா?.. விஜய்க்கு இருக்கும் சவால்!..

Webdunia 1 week ago
மிழக அரசியலில் கூவத்தூர் சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரின் நெருங்கிய தோழியான சசிகலாதான் முதலமைச்சர் என அதிமுக எம்எல்ஏக்கள் அறிவிக்க ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கடிதம் கொடுத்தார் சசிகலா.
ஆனால் ஆளுநர் ஒரு வாரமாகியும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஏனெனில் அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருந்தது.

வழக்கில் சசிகலா குற்றவாளி.. அவர் 4 வருடம் சிறைக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பு வெளியானதால் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் சிறை வைத்தார். ஏனெனில், அப்போது அதிமுக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருந்தார். எனவே அவர் பக்கம் யாரும் போய் விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு நடந்தது.

அங்குதான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 233 வேட்பாளர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். விஜய் தமிழக அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என பலரும் நம்புகிறார்கள். விஜயின் தவெக ஆட்சி அமைக்கும் அளவுக்கு தேர்தலில் வெற்றி பெறாது என்றாலும் 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே கண்டிப்பாக அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காமல் போகும். எனவே கண்டிப்பாக தவெக வேட்பாளர்களை பேரம் பேசி இழுப்பார்கள்..


பணத்திற்காக பலரும் அப்படி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். இது தெரிந்துதான் நேற்று தவெக வேட்பாளர்களிடம் கானொலியில் பேசிய விஜய் 'தேர்தலில் வெற்றி பெற்றால் என்னுடன் இருப்பீர்களா?' என கேள்வி எழுப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு 'தேர்தலில் வெற்றி பெற்றால் இரவு எந்நேரமானாலும் பனையூருக்கு வந்து என்னை சந்திக்க வேண்டும். நான் உங்களுக்காக காத்திருப்பேன்' எனவும் விஜய் கூறியிருக்கிறார்.

ஒருவேளை 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றால் வேட்பாளர்களை மற்ற கட்சிக்கு தாவ விடாமல் பாதுகாக்க வேண்டியது விஜயின் பொறுப்பு.. கண்டிப்பாக அவர்களை கூவத்தூர் போல ஒரு ரிசாட்டில்தான் அடைத்து வைக்க வேண்டும்.. விஜய் இதையெல்லாம் எப்படி சமாளிப்பார் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் இன்னொரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil