நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்த செய்தி அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் சட்டமன்றத்தில் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், மக்களின் விருப்பமும் அதுவே என்றும் தெரிவித்தார். "உங்களுடைய வெற்றி வாய்ப்பு பறிபோனது எங்களை நிலைகுலையச் செய்துள்ளது. நீங்கள் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியை ராஜினாமா செய்யத் தயார். அங்கு நீங்கள் போட்டியிடுங்கள்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததாகக் கூறினார்.
ஆனால், இந்த தாராள மனப்பான்மையைத் தடுத்த ஸ்டாலின், தமிமுன் அன்சாரியின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு, "அப்படி ஒரு வார்த்தையை நீங்கள் சொல்லக்கூடாது; நீங்கள் மக்களுக்காக சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்று அன்புடன் மறுத்துவிட்டாராம். தங்களின் வெற்றி மகிழ்ச்சியைக்கூடக் கொண்டாட முடியாத அளவிற்கு ஸ்டாலினின் தோல்வி தங்களை வாட்டுவதாக தமிமுன் அன்சாரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Edited by Siva

