தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. துவக்கத்தில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில், ஒருகட்டத்தில் விஜயின் தவெக முதலிடத்தில் வந்தது. மேலும், அதிமுக இரண்டாம் இடத்திற்கும், திமுக மூன்றாம் இடத்திற்கும் போனது.
தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மூன்று, நான்கு சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் தவெக முன்னிலையில் இருக்கிறது மொத்தம் 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் தவெகவும், 75 தொகுதிகளில் அதிமுகவும், 51 தொகுதிகளில் திமுகவும் முன்னிலையில் இருக்கிறது. அதாவது திமுக மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது.. தவெக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் திமுகவின் கோட்டையாக கருதுக்கப்பட்ட சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். மிகவும் ஆச்சரியப்படும் விதமாக கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலினும், திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள்.
அதேபோல் அதிமுகவின் கோடையாக பார்க்கப்பட்ட கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தவெக முன்னிலையில் இருக்கிறது.. 4 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் திமுகவும் முன்னிலையில் இருக்கிறது..