தமிழகத்தின் அரசியல் இதயமான சென்னையில் இன்று அரங்கேறி வரும் மாற்றங்கள், ஒட்டுமொத்த மாநிலத்தையுமே உற்றுநோக்க வைத்துள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், சென்னையின் மொத்தமுள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் முன்னிலை பெற்று வருகிறது.
நீண்டகாலமாகத் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட தலைநகரில், தற்போதைய நிலவரம் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளதோடு, 'சென்னை இனி விஜய்யின் கோட்டை' என்ற புதிய பிம்பத்தை உருவாக்கியுள்ளது.
மிக முக்கியமாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களம் கண்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து அமைச்சரவையின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட அனைவரும் சென்னையின் பல்வேறு தொகுதிகளில் பின்தங்கியிருப்பது திமுக தொண்டர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
தலைநகரில் தவெக வேட்பாளர்கள் பெற்று வரும் இந்த முன்னிலை, மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
சென்னையின் 16 இடங்களிலும் தவெக-வின் கொடி உயரப் பறந்து வருவது, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதையே உறுதிப்படுத்துகின்றது.
சென்னை தேர்தல் 2026, தவெக முன்னிலை, விஜய், முதல்வர் பின்னடைவு, உதயநிதி ஸ்டாலின், திமுக வீழ்ச்சி, தமிழக அரசியல் 2026
Edited by Siva

