நடிகர், திரைப்பட விமர்சகர் என ரசிகர்களால் அறியப்பட்டவர் சத்யேந்திரா. ஆந்திராவில் பிறந்தாலும் கர்நாடகாவில் வளர்ந்தவர்.
கன்னடம், தமிழ், ஆங்கிலம் என பழமொழிகளிலும் பேசும் வல்லமை கொண்டவர் இவர். மறைந்த நடிகர் ரகுரனுக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர். அவருடன் ஒரே அறையில் தங்கி இருந்ததாகவும் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த 1988ம் வருடம் வெளியான சத்யா படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். மண்வாசனை படத்தில் ரேவதிக்கும் பாண்டியனுக்கும் இடையே போட்டி பாடலாக ஒரு பாடலில் இவர் நடனமாடியிருப்பார்.

பாட்டுக்கு ஒரு தலைவன், சொல்லாமலே, பிரியமானவளே, விசில், 18 வயசு உள்ளிட்ட பல படங்களிலும் சத்யேந்திரா நடித்திருக்கிறார். புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது படத்தை பார்த்து விட்டு தியேட்டர் வாசலில் ஊடகங்களுக்கு அப்படம் பற்றிய விமர்சனங்களை சொல்வார். மிகவும் நேர்மையுடன் அந்த படத்தை பற்றிய கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்வார் சத்யேந்திரா. உலக சினிமா அறிவும் கொண்டவர். நிறைய ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார். 45 வருடங்களுக்கும் மேல் சினிமா உலகில் பயணித்தவர் இவர்.
இந்நிலையில்தான், இன்று அவர் தனது அறையில் இறந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் மறைவுக்கு திரையுலகையை சேர்ந்த சிலரும், சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.