Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

Webdunia 5 days ago
லகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு டீ,காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதுவும் காலை எழுந்ததும் ஒரு காபி, பதினோரு 12 மணி அளவில் ஒரு டீ, மதியம் 4 மணி அளவில் ஒரு டீ, இரவில் தேநீர், உணவு உண்ட பின் காபி ன பலருக்கும் டீ,காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது..
அதுவும் சீன மக்களுக்கு ஒவ்வொரு முறை உணவருந்திய பின்னரும் டீ அருந்தும் பழக்கம் இருக்கிறது. மேலும், பால் கலந்த தேநீர், பிளாக் டி, க்ரீன் டீ என பல வகையான தேநீர் இருக்கிறது. அவரவர் விருப்பத்திற்கேற்ப அருந்துகிறார்கள்.

பெரும்பாலும் டீ, காபியை அதிக சூடுடனே குடிக்க பலரும் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில்தான், அதிக சூடாக இருக்கும் டீ, காபி உள்ளிட்ட பானங்களை தொடர்ந்து குடிப்பதால் உணவு குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என குறிப்பாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சுமார் 65 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும் பானங்கள் உணவு குழாய் செல்களின் உட்புற அடுக்குகளை சேதப்படுத்தப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

அதனால் கொதிக்கும் சூட்டில் பானங்களை குடிப்பதை தவிர்த்து சற்று ஆறிய பிறகு குடிப்பது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil