தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதி மட்டுமின்றி திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
அப்போது 'ஜனநாயகன் படத்தை வெளிவிடாமல் செய்தது ஒரு கூட்டு சதி.. எங்கே எனக்கும் உங்களுக்கும் எடுக்கும் இடையே உள்ள அன்பு மேலும் நெருக்கமாகி விடுமோ என்பதாலும், ஜனநாயகன் படம் இந்த தேர்தலில் நமக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என பயந்து சிலர் செய்த கூட்டு செய்தியால்தன் அந்த படம் வெளியாகவில்லை' என விஜய் ஒரு பேப்பரை பார்த்து படித்தார்.
அந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து 'தன்னுடைய பிரச்சனையை கூட எழுதி வைத்து படிக்கும் ஒரே தமிழக அரசியல்வாதி விஜய் மட்டும்தான்' என அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்..

