Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?!.. என்னமோ நடக்குது!..

தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?!.. என்னமோ நடக்குது!..

Webdunia 13 hrs ago
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் 2004ம் வருடம் நடந்தது.
திருமணம் முடிந்து 20 வருடங்கள் ஆன நிலையில், அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்துவிட்டனர்.

ஆனாலும் மகன்கள் இருவரும் அப்பாவிடமும், அம்மாவிடமும் மாறி மாறி இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாகவே ரஜினியின் குடும்பத்துடன் தனுஷ் நெருக்கமாக காணப்படுகிறார். சமீபத்தில் சென்னை ரோகினி தியேட்டரில் ஜெயிலர் 2 முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரஜினியின் குடும்பத்தினர் வந்திருந்த போது தனுசும் அங்கே இருந்தார்.

அதோடு, ரஜினியின் குடும்பத்தினர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தனுஷும் கலந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரச்சனை எல்லாம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தனுஷ் - ஐஸ்வர்யாவும் மீண்டும் ஒன்றிணைந்து வாழ்வார்கள் எனவும் செய்திகள் அடிபடுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil