Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெகவுக்கு ஆதரவு இல்லை!.. அதிமுக அறிவிப்பு!...

தவெகவுக்கு ஆதரவு இல்லை!.. அதிமுக அறிவிப்பு!...

Webdunia 2 weeks ago
மிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதையடுத்து தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்திருக்கிறார். நேற்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் இன்று மதியம் 3.30 மணியளவில் விஜய் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சென்று ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்தார்.ஒருபக்கம் தவெகவுக்கு ஆட்சி அமைக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்தாலும் இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படுகிறது..


எனவே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக கடிதம் அனுப்பியிருக்கிறது. அவர்கள் இதுபற்றி தங்களின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கூறுவதாக கூறியிருக்கிறார்கள்.ஒருபக்கம் இன்று காலை முதலே தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி அதிமுக பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியானது.

சிவி சண்முகம், வேலுமணி ஆகியோர் உள்ளிட்ட சிலர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இது தொடர்பாக ஆலோசனையின் நடத்திவந்தனர். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த கேபி முனுசாமி தவெகவுக்கு ஆதரவு இல்லை என கூறியிருக்கிறார்


இன்று காலை முதலே பல ஊடகங்களில் அதிமுக தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் பொய்யான செய்தி. தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதை பொதுச்செயலாளர் பழனிச்சாமி சொன்னதன் பேரில் இதை தெரிவிக்கிறேன்' என கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil