Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தீபாவளி முடிஞ்சிருச்சு.. பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் எப்போது? முக்கிய தகவல்...!

தீபாவளி முடிஞ்சிருச்சு.. பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் எப்போது? முக்கிய தகவல்...!

Webdunia 3 hrs ago

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி தொடங்குகிறது.

வழக்கமாக நீண்ட தூர ரயில் பயணங்களுக்கு 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், தென்னக ரயில்வே இதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நவம்பர் 14-ஆம் தேதியும், ஜனவரி 14 போகிப் பண்டிகையன்று ஊருக்கு செல்ல விரும்புவோர் நவம்பர் 15-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

அதேபோல, பண்டிகை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்ப விரும்புவோர் ஜனவரி 18 மற்றும் 19 ஆகியபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள ரயில் பயணிகளுக்கான முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படவுள்ள பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.

பொதுவாக 60 நாட்களுக்கு முன்பே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், பயணிகள் தங்கள் பயண தேதிக்கேற்ப முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜனவரி 12-ஆம் தேதி பயணத்திற்கு - நவம்பர் 13

ஜனவரி 13-ஆம் தேதி பயணத்திற்கு - நவம்பர் 14

ஜனவரி 14-ஆம் தேதி பயணத்திற்கு - நவம்பர் 15

ஜனவரி 15-ஆம் தேதி பயணத்திற்கு - நவம்பர் 16

அதேபோல, பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பணி செய்யும் நகரங்களுக்கு திரும்ப விரும்புவோர், ஜனவரி 18-ஆம் தேதி பயணத்திற்கு நவம்பர் 19-ஆம் தேதியும், ஜனவரி 19-ஆம் தேதி பயணத்திற்கு நவம்பர் 20-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம், செயலி வாயிலாகவோ அல்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil