Dailyhunt
தேர்தல் முடிவுகள் 2026: கோவையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலை!..

தேர்தல் முடிவுகள் 2026: கோவையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலை!..

Webdunia 1 week ago
மிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கிது. அதில், இதுவரை வெளியாகியுள்ள 146 தொகுதிகளுக்கான முடிவில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி தவெக 65 தொகுதிகளிலும், அதிமுக 48 தொகுதிகளிலும், திமுக 34 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

இதில், திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் 800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேநேரம், தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் இருக்கிறார். ஒருபக்கம், அதிமுகவிலிருந்து திமுகவுக்கு போய் பல சர்ச்சைகளை சந்தித்த செந்தில் பாலாஜி கோவை தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.


கடந்த பல வருடங்களாகவே தபால் வாக்குகளை திமுக மட்டுமே முதலிடத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. திமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது. அதேநேரம், 234 தொகுதிகளுக்குமான தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே முழு விபரம் தெரியவரும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil